உலகில் பார்வையிட சிறந்த நாடுகளில் இலங்கை மீண்டும் இடம்பிடித்தது!

Date:

இவ்வருடம் உலகில் பார்வையிட சிறந்த 23 நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது.

போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கைகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த 23 நாடுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம், கண்டி, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகவும், இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...