எதிர்காலம் இன்னும் கடினமானது: நந்தலால் பிபிசிக்கு பேட்டி

Date:

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்னும் கடினமான காலம் வரவிருப்பதாகவும், அதனால் பொருளாதாரம் ஒரு திசையில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார்.

அடிகள் முன்னோக்கி ஒரு அடி பின்வாங்கினால் தற்போதுள்ள பொருளாதார நிலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகின்றார்.

ஆண்டுகளுக்குள் பொருளாதாரம் தொடர்ந்து ஒரு திசையில் செல்ல வேண்டும், நாட்டின் பொருளாதாரம் தொடர்பான முதலாவது சவாலானது கடன் மறுசீரமைப்பு எனவும், கடனை செலுத்தும் திறன் 10 வருடங்களுக்குள் ஆராயப்பட்டு கடனை உறுதிப்படுத்தி கடனை செலுத்த வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் ஒரு பகுதி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் பாரிய சீர்திருத்தங்கள் உள்ளதாகவும், நிதிக் கொள்கை, நாட்டின் நிதிக் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அடங்குவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகளில் சமூக பாதுகாப்பு கொள்கைகளை அமுல்படுத்துதல் மற்றும் ஊழலற்ற நல்லாட்சியை வலுப்படுத்துதல் என்பன உள்ளடங்குவதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...