என்னை தூக்கிலிட வேண்டுமென்பதே கர்தினால் ரஞ்சித்தின் விருப்பம்: மைத்திரி குற்றச்சாட்டு

Date:

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தாம் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதல்களின் குற்றவாளியாக என்னை குறிவைப்பது நியாயமற்றது என்று முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

2019 மே 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்ற போதிலும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், தாக்குதல்கள் தொடர்பாக தன்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிட விரும்புவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

மேலும், தாக்குதல்கள் தொடர்பாக என்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என்ற அவசர தேவை கர்தினாலுக்கு உள்ளது. ஆனால் உரிய விசாரணைகள் முடிவடையாமல் அவர் இதைச் செய்ய முயற்சிக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...