எவ்வித கட்டணமும் இன்றி வீதியோரங்களில் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி !

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சிறிய அளவிலும் பொருட்களை தயாரிக்கும் தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இன்று (01) முதல் வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக இந்த அனுமதி வழங்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை வீதியோரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் பிரதேச செயலாளரின் ஒப்புதலுடனும் மேற்பார்வையுடனும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் இவ்வாறான விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...