கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதி!

Date:

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

31 வயதான தனுஷ்க குணதிலக்க, இன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனை மாற்றத்துக்காக விண்ணப்பித்தார்.

அவர் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். தனுஷ்க குணதிலக்க, கடந்த 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் பெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டன.

அதனூடாக அவருக்கு வட்ஸ் அப் பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியே செல்லவும் நீதிமன்றம் அனுமதித்தது.

இந்த நிலையில், தற்போது பிணையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் குணதிலக்க தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் சமூக ஊடகங்களில் தொடர்புகொள்வதை தடுக்கும் வகையில், அவரது கணக்குகளை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முன்னதாக உத்தரவிட்டது.

குணதிலக்கவின் வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அரசுத் தரப்புக்கு தகவல்களைத் திரட்ட மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...