கோட்டே ஜூப்லி நீர் தாங்கிக்கு நீரேந்திச் செல்லும் பிரதான குழாயில் பத்தரமுல்லை பொல்தூவ பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடுவெல, கோட்டை, மஹரகம, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும் இன்றிரவு 09 மணி வரை நீர்விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் கசிவை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை முன்னெடுக்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.