சூடானில் போருக்கு மத்தியில் வீடுகள், கடைகளை சூறையாடி கொள்ளையடிக்கும் இராணுவ வீரர்கள்!

Date:

சூடான் நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்துள்ளது. சூடானில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.

இதனால் அவர்கள் சூடான் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இருபடையினரும் 3 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் போர் நிறுத்தத்தை மீறி சூடானில் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பதற்றம் நிறைந்த டார்மர் மாகாணத்தில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் இந்த மாகாணத்தில் ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஜெனனா நகர முக்கிய சந்தை கடுமையாக சேதம் அடைந்து உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் சண்டையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் போருக்கு மத்தியில் கொள்ளையடிக்கும் முயற்சியில் இராணுவ படையினர் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

தர்பார் பகுதியில் கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரியும் போராட்டக்காரர்கள் கடைகள், மால்கள், மற்றும் வீடுகளை உடைத்து அங்கிருக்கும் பொருட்கள் மற்றும் நகை, பணத்தை சூறையாடி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...