தூனீசிய எதிர்க்கட்சித் தலைவர் ராஷித் கன்னூசி கைது!

Date:

தூனீசிய எதிர்க்கட்சியான அந்நஹ்ழாவின் அலுவலகத்தைச் சோதனைக்குள்ளாக்கிய பாதுகாப்புப் படையினர் எதிர்க்கட்சித் தலைவர் ராசித் அல் கன்னூசியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர் “தெரியாத இடமொன்றுக்கு“ அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக கடந்த டிசம்பரில் எதிர்க்கட்சியின் உப தலைவரும் முன்னாள் பிரதமருமான அலி லாராயித் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை இடைநிறுத்தி அதிகாரம் முழுவதையும் தன்கைவசப்படுத்தியுள்ள ஜனாதிபதி கைஸை விமர்சித்த பலர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

81 வயதான ராஷித் அல் கன்னூசி இதே விடயத்துக்காக இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு நிதியுதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

தற்போதைய கைது மிகவும் சீரியஸானது என அவரது ஆதரவாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...