நாளை (24) முதல் தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், அறுவைசிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிக்கல்களை ஏற்படுத்திய மருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேசிய கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.