நியூசிலாந்துக்கு 183 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Date:

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3வது ரி20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் Ben Lister 2 விக்கெட்டுக்களையும் Adam Milne மற்றும் Ish Sodhi ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...