பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்டிருந்த ஒரு மாத வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்த நிலையில் இன்று (17) பணிக்குத் திரும்பியுள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன உறுப்பினர்களின் விசேட கூட்டத்தின் போதே இந்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குருவுயு உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சமீபத்திய வரி திருத்தத்திற்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது