பாரிஸில் தொடர் கொள்ளை சம்பவங்கள் : இளம் பெண் உட்பட பதினொரு பேர் கைது!

Date:

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் Blanc- Mesnil நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிகளில் பாரிஸில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள பல பெறுமதியான நகைகள், பணம் போன்றவற்றைத் கொள்ளையிட்டுள்ளார்.

மொத்தமாக 7 மில்லியன் யூரோக்கள் வரை அவர் கொள்ளையிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் 19 வயதுடையவர் எனவும், அவருடன் சேர்த்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பதினொரு பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...