புத்தாண்டை முன்னிட்டு நோன்பாளி களுக்கு கஞ்சி வழங்கிய தேரர்: ரொட்டவெவவில் சம்பவம்!

Date:

சகவாழ்வை ஏற்படுத்த தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என திருகோணமலை மஹதிவுல்வெவ பப்பதாராம விகாரையின் விகாரதிபதி சீல விசுத்தி தெரிவித்துள்ளார்.

ரொட்டவெவ மஸ்ஜிதுகள் ஹுதா ஜும்மா பள்ளிவாசலுக்கு நேற்று (13) சென்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

நோன்பு மாதத்தை கௌரவிக்கும் முகமாக சித்திரை புத்தாண்டு தினத்தில் நோன்பு நோற்கும் நோன்பாளிகளுக்கு இலவசமாக கஞ்சி கொடுக்க வேண்டும் என்ற யோசனை வந்ததாகவும், இதனை எப்படி கொடுப்பது என தெரியாத போது மொரவெவ சிவில் சமூக அமைப்பு தனக்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் விகாராதிபதி சீல விசுத்தி இதன்போது தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்…

நாங்கள் சிங்கள புத்தாண்டு வருடத்தை கொண்டாடி வருகின்றோம். இதே நேரம் நோன்பை நோக்கும் முஸ்லிம் சகோதரர்களும் இருக்கிறார்கள். சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் நான் யோசித்தேன்.

புத்தாண்டு தினத்தில் நோன்பு திறக்கும் நேரத்தில் இலவசமாக கஞ்சி கொடுக்கும் நடைமுறையை இம்முறை பின்பற்ற வேண்டும் என யோசித்தேன். அதன் அடிப்படையில் இன்றைய தினம் பள்ளிவாயலுக்கு வருகை தந்தேன் எனவும் மஹதிவுல்வெவ பப்பதாராம விகாரையின் விகாரதிபதி சீல விசுத்தி தெரிவித்தார்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...