புருனே நாட்டிலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வு

Date:

புருனே நாட்டில் வசிக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று (8) இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தனர்.

உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் எல்லா இடங்களில் தங்களுடைய ரமழானுடைய முக்கியமான வணக்கமாக இருக்கின்ற நோன்பு திறக்கும் நிகழ்வை பல்வேறு விதமான முறையிலேயே அனுஸ்டித்து வருகின்றார்கள்.

இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் தங்களுடைய சமூக ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் சமகால விவகாரங்களையும் கருத்து பரிமாற்றுங்களுக்கான சந்தர்ப்பமாகவும் தமக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை பலப்படுத்தும் வகையில் இந்த இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.

அந்த வகையில் நேற்று  புருனே நாட்டில் பெர்பி என்ற இடத்தில் Wafa hotel-லில் மனிதநேய சொந்தங்களின் ஏற்பாட்டில் ‘இஃப்தார் -நோன்பு துறப்பு ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும் மனிதநேய ஜனநாயக் கட்சின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும் புருனே யில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும்  இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...

பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் இடியுடன் மழை

இன்று (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...