பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம்!

Date:

பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்காலத்தில் வசதியான ஆடைகளை அணிய நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதற்கமைய உயர்நீதிமன்ற விதிகளின் பிரகாரம்  பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், 2023.03.30 அன்று வெளியிடப்பட்டுள்ளதுடன் தற்போது புதிய ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வெள்ளை, கறுப்பு, வெளிறிய வெண்மை, சாம்பல் அல்லது ஊதா நிறத்திலான சேலை மற்றும் சட்டை அல்லது வௌ்ளைநிற மேற்சட்டை, கறுப்புநிற கோற் மற்றும் காலணிகளுடன் கறுப்பு நிற காற்சட்டை அல்லது வௌ்ளைநிற மேற்சட்டைஇ கறுப்பு நிற கோற் மற்றும் காலணிகளுடனான கறுப்பு நிற பாவாடை ஆகியவற்றை அணியலாம். காற்சட்டையின் நீளம் கணுக்கால் வரை இருத்தல் வேண்டும்.

பாவாடையின் நீளம் அமரும்போது முழங்காலுக்குக் கீழ் இருத்தல் வேண்டும். மேற்சட்டை கழுத்துவரை அணியப்பட்டு நீண்ட கையுடையதாகவிருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான ஆடைக் குறியீடுகளில் மாற்றம் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...