முன்னாள் சட்ட மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்?

Date:

வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று(19) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று காணப்படுவதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற விதம், நேரம், தினம் மற்றும் ஏனைய விடயங்கள் அரச புலனாய்வுச் சேவை எனப்படும் SIS நிறுவனத்திற்கு கிடைத்தமையின் ஊடாக பாரிய சதித்திட்டமொன்று இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றமை வௌிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பாரிய சதித்திட்டத்துடன் தொடர்புடைய அனைவரும் சாட்சியங்களின் ஊடாக வௌிப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...