சீரற்ற காலநிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
பதுளை, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் தற்போதைய மழையுடனான வானிலை அடுத்த மூன்று நாட்களில் குறையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.