மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம்!

Date:

ஒரு வாரத்தில் சுமார் 1800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் பருவமழை தொடங்குவதால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும்,  வாராந்தம் 1000 நோயாளர்கள் பதிவாகும் போதிலும், 500 நோயாளர்களே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியும் என்றார்.

டெங்குவின் இனப்பெருக்க இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு நோயின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை 28,448 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 13,958 பேர் மேல் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்களே எனவும், பாடசாலைகளுக்கு அருகில் டெங்கு நுளம்புகள் பெருகுவது அதிகரித்துள்ளதாகவும், பாடசாலைகளைச் சுற்றியுள்ள சூழலை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 62 வீதமானவர்கள் 20 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...