மே 1ஆம் திகதிக்கு பின்னர் முட்டை விலை குறையும்!

Date:

மே முதலாம் திகதிக்கு பின்னர் தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட குறைவான விலையில் முட்டையின் விலையை குறைக்க தயாராக இருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் முதல் விலையை குறைப்பதற்கு அதிகாரிகளின் தலையீடு தேவையில்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையானது தற்போது முட்டைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்துள்ள போதிலும், விநியோகம் மற்றும் தேவைக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏழு முதல் எட்டு மாதங்களாக முட்டை உற்பத்தியாளர்களை குறிவைத்து வருகிறது, ஆனால் நடைமுறையில் விலையை குறைக்க தவறிவிட்டது.

பண்டிகைக் காலங்களில் தேவை அதிகமாக காணப்படுவதாகவும் அதனால் முட்டையின் விலை அதிகரிப்பது இயல்பானது எனவும் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...