ராம நவமி வன்முறை: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சிக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்

Date:

இந்தியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

தனது அதிகாரபூர்வ இணைய தளத்திலேயே இந்த கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை  தலைமைச் செயலகம் கண்டிக்கிறது.

ராம நவமி ஊர்வலத்தின் போது இந்தியாவின் பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தீவிரவாத ஹிந்து கும்பல் ஒன்று, கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி பீகார் ஷெரீப்பில் மதரஸா மற்றும் அதன் நூலகத்தை எரித்தது உட்பட பல வன்முறை மற்றும் நாசவேலைகளை ஈடுபட்டுள்ளதை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  தலைமைச் செயலகம் ஆழ்ந்த கவலையுடன் அவதானித்தது.

இந்நிலையில், அமைப்பின் தலைமைச் செயலகம் இத்தகைய ஆத்திரமூட்டும் வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் மீதான இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முறையான இலக்குகளின் மீதான தெளிவான தாக்குதல் வெளிப்பாடாகும்.

இதுபோன்ற வன்செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, பாதுகாவல், உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், இந்திய அதிகாரிகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலகம் குறித்த அறிக்கையில் கேட்டுக்கொள்கிறது.

 

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...