வரலாற்றில், முதல் முறையாக கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

Date:

வரலாற்றில் முதல் முறையாக ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முப்படை வீரர்கள் மற்றும் இளமானி பட்டக்கலை மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வுகள்

வரலாற்றில் முதல் முறையாக ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் இப்தார் 2023′ நிகழ்வு அண்மையில் பல்கலைக்கழகத்தின் உணவு விடுதியில் நடைபெற்றது.

இந்த இப்தார் நிகழ்வானது அண்மைக் காலத்தில் முனுரு இல் ஏற்பாடு செய்யப்பட்ட சகல மத மாணவர்களும் ஒரே இடத்தில் நோன்பு திறந்த ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வாகும்.

இப்தார் என்பது ஒரு முஸ்லிம் பாரம்பரியமாகும், இது சகல மனிதகுலத்தினர் மத்தியில் பசி பட்டினியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் அமல்களில் ஒன்றாகும் இதன் மூலம் ஏழை மக்களின் பசியை உணர்ந்து செல்வம் படைத்தவர்கள் தர்மங்களை வாரி வழங்கும் மாதமாகும்.

பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், மேஜர் ஜெனரல் எம்.பி. பீரிஸ் RWP RSP VSV USP ndc psc MPhil, பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக  மெளலவி அல்ஹாஜ் எம் ஃபாஸில் பாரூக் (Senior Executive Member of the ACJU) கலந்து கொண்டு நோன்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

பிரதி  உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்), பிரிகேடியர் DCA விக்கிரமசிங்க USP USACGSC, பிரதி உபவேந்தர் (கல்வி), பேராசிரியர் KAS தம்மிக்க, பீடாதிபதிகள், நிகழ்வின் அனுசரணையாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் மற்றும் சகல மதத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 300 மேற்பட்ட மாணவர்களும் இப்தார் நிகழ்வில் கலந்து  கொண்டனர்.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...