வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்!

Date:

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை சுற்றி நிலவும் காற்றின் ஓட்டம் மிகவும் பலவீனமாக உள்ளதால், சுற்றுச்சூழலின் வெப்பநிலை உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள  துணை இயக்குநர் மெரில் மெண்டஸ் தெரிவித்தார்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் வெப்பமான காலநிலை அதிகமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெப்பமான காலநிலை நிலவும் இக்காலத்தில் இயற்கையான திரவ உணவைப் போன்று தண்ணீரையும் அதிகமாகப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம் என ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...