அமைதியும் நல்லிணக்கமும் வலிமைப்பெற உறுதியேற்போம்: தமிழ்நாடு ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

Date:

அமைதியும் நல்லிணக்கமும் வலிமைப்பெற உறுதியேற்போம் என தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் கொண்டாடப்படும் இன்பத் திருநாட்களில் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் முதன்மையானது. ரமலான் மாதம் முழுவதும் இறையச்சத்தோடு நோன்பிருந்து அதன் நிறைவாக இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

நீலவானத்தில் தோன்றும் மெல்லிய வெண்பிறையை வசந்தத்தின் வருகையாக கருதி; உலகமெங்கும் கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.

இறை உவப்பை நாடி, ஏழைகளை தேடி வீதிகளில் ஓடி ஓடி செய்யும் உதவிகள் இப்பெருநாளை ஈகைத்திருநாளாக முன்னிறுத்துகிறது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தி; செல்வங்களை பகிர்ந்தளித்து இப்பெருநாளை உலகமெங்கும் 200 கோடி மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய திருநாட்டில் 25 கோடி மக்களின் இதயத்திருநாளாகவும் இப்பெருநாள் திகழ்கிறது.

இந்நன்னாளில் தாய்மண்ணை துறந்து வாடும் அகதிகளின் நலன்களுக்காகவும், சிறைகளில் கதறி அழும் அப்பாவிகளின் விடுதலைக்காகவும், வறுமையோடு மோதி காயப்படும் ஏழைகளின் மேன்மைக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

மேலும், நமது தாய் மண்ணில் அமைதியும், நல்லிணக்கமும் வலிமைப்பெற உறுதியேற்போம் என வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...