அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் தொடர்பான விபரங்கள்!

Date:

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன.

இதற்கமைய பொதுஜன பெரமுன இந்த வருடத்திற்கான தொழிலாளர் தின நிகழ்வை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் முன்னெடுக்கவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிற்பகல் 02 மணியளவில் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் பி ஈ குணசிங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பீ ஆர் சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிலாளர் தினக்கூட்டம் கண்டி பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...