இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி!

Date:

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது T20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றார்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் Ben Lister 2 விக்கெட்டுக்களையும் Adam Milne மற்றும் Ish Sodhi ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்ப்பில் Tim Seifert 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.இலங்கை அணி சார்ப்பில் பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அதனடிப்படையில் 2 – 1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...