ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய பொது இடங்களில் கெமராக்கள்!

Date:

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப் அணியாத இளம் பெண் மாஷா அமினி போலீஸ் காவலில் பலியானதைத் தொடர்ந்து, அந்நாட்டு பெண்கள் ஹிஜாப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களை கெமராக்கள் மூலம் கண்டறி ந்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை ‘மதிப்புகளைப் பாதுகாத்தல், குடும்ப தனியுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் மன ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பேணுதல் ஆகியவற்றின் பின்னணியில், சட்டத்திற்கு எதிரான எந்தவொரு தனிப்பட்ட அல்லது கூட்டு நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று Tasnim  செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஹிஜாப் அணியாததால் இரண்டு பெண்கள் மீது ஆண் ஒருவர் தயிர் சட்டியை வீசிய காட்சி இந்த மாத தொடக்கத்தில் வைரலானது. ஈரானின் ஆடைக் குறியீட்டை மீறியதற்காக இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...