எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், இந்த சதவீதம் 15.5 சதவீதமாக உள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதுடன், இருநூற்றி இருபத்தி இரண்டு குழந்தைகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்குள் மட்டும் இந்த வயதுக்குட்பட்ட எடைக்குறைந்த குழந்தைகள் ஆயிரத்து நானூற்று அறுபது பேர் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்தின் தரவு அறிக்கைகளின்படி, நகர்ப்புறம், கிராமம் மற்றும் தோட்டங்கள் என அனைத்துத் துறைகளிலிருந்தும் எடை குறைந்த குழந்தைகளின் அறிக்கை அதிகரித்து வருகிறது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக குடும்பங்களுக்கிடையில் ஊட்டச் சத்துக் குறைபாடுகள் உருவாகி வருவதால் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...