பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், குறிப்பாக இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்களாக இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிராவர்மன் கூறியிருந்தார்.
I will do whatever it takes to root out grooming gangs once and for all.
Here's how 👇 pic.twitter.com/ZOLoMxippH
— Rishi Sunak (@RishiSunak) April 3, 2023
இதனையடுத்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை கண்காணித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உறுதி செய்ய புதிய அதிரடிப் படை அமைக்கும் திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன்போது, ”இனவெறி, மதவெறி குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது தவறு. குற்றம் செய்தவர்கள் இனி தப்ப முடியாது” என்றார்.