ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது ரஷ்யா!

Date:

ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தலைமை பதவியை வகிக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மீதான பனிப்போருக்குப் பிறகு மேற்கு நாடுகளுடன் உறவுகள் மிகக் குறைந்த நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஷ்யா தலைமைத்துவத்தை பொறுப்பேற்றமையானது சர்வதேச சமூகத்தின் முகத்தில் அறைந்தமைக்கு சமம் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பதவியை துஷ்பிரயோகம் செய்வதற்கான முயற்சியை அனைவரும் ஒன்றிணைத்து முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இருப்பினும், சபையில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவை தலைமை பதவிக்கு வருவதை தடுக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...