புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும்போது, அவை கலாசாரத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்றவாறு உள்ளனவா? என்பது குறித்து எதிர்காலத்தில் ஆராய உள்ளதாக புத்தசாசன, மதவிவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சில புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் இடம்பெறும் விளையாட்டுகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.