ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிய எலான் மஸ்க் தற்போது ட்விட்டரின் லோகோவை மாற்றியிருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல சிக்கல்கள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இவருக்கு எதிராக பல வழக்குகளும் தொடர்ந்துக் கொண்டே வந்தது. இவர் தற்போது டோஜ்காயினுக்கு பயன்படுத்தப்படும் நாய் படத்தை, தனது ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
முன்னதாக நீல நிற குருவி ஒன்று இருந்தது தற்போது அதற்கு பதில் நாய் புகைப்படம் ஒன்று லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.
ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.
எலான் மஸ்க் திடீரென லோகோவை மாற்றக் காரணம் என்ன? அதுவும் நாயின் லோகோவை வைத்தற்கான காரணம் என்பது பற்றி இன்னும் விரிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை.
நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் டுவிட்டர் லோகோவான நீலநிற குருவியையும் இப்போது மாற்றியுள்ளமையானது டுவிட்டர் பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.