குறைந்த நீர்மட்டம் நாட்டின் மின் உற்பத்தியை பாதித்துள்ளது!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8% ஆக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்த நீர்மட்டம் நாட்டின் மின் உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது.

குறிப்பாக காசல்ரீ, கொத்மலை மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களில் மிகக் குறைந்த நீர்மட்டம் பதிவாகியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு இப்போது 13% ஆகவும், கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் முறையே 13.3% மற்றும் 15% கொள்ளளவாகவும் உள்ளது.

இதேவேளை விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 34% ஆகவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 84% ஆகவும், சமன் வெவ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 38% ஆகவும் உள்ளது.

மேலும் மொத்த மின் உற்பத்தியில் 14% மாத்திரமே நீர்மின் நிலையங்கள் மூலமாகவும், 72.5% அனல் மின் நிலையங்களில் இருந்தும் கிடைகின்றன. இலங்கையில் நாளாந்த மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதுடன், மணித்தியாலத்திற்கு 45.2 ஜிகாவாட்களை எட்டியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...