கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயப்பகுதியில் பலத்த பாதுகாப்பு: அமைதிப் பேரணி கொழும்பு வந்தடைந்தது

Date:

ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில்   (20) நடைபெற்ற இறைவணக்கத்தில் கலந்துகொண்ட மக்கள் கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள தேவாலயத்தை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்தனர்.

இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான விசேட இரவு ஆராதனையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

பூஜை முடிந்ததும், அதில் கலந்து கொண்ட மக்கள் வரிசையாக நின்று கொச்சிக்கடை தேவாலயத்தை நோக்கி பேரணியை அமைதியான முறையில் தொடங்கினர்.

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்திற்கு செல்லும் இந்த பாதயாத்திரைக்காக கட்டுநாயக்க – சிதுவ உள்ளிட்ட பல இடங்களில் டன்சல்களை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று(21) காலை 8.00 மணிக்கு கொச்சிக்கடை தேவாலயத்திற்கு  செல்லும் இக்குழுவினர் அங்கு நடைபெறும் இறை ஆராதனையிலும் பங்கேற்றனர்.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இணைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளனர்.

.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...