சமூக நீதிக் கட்சியின் முதலாவது பேராளர் மாநாடு!

Date:

சமூக நீதிக் கட்சியின் முதலாவது பேராளர் மாநாடு எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

கடந்த 2022 பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சமூக நீதிக் கட்சியானது ஸ்தாபிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

“சமூக நீதி” எனும் எண்ணக்கருவை கருத்தியலாகவும் நடைமுறையாகவும் கொண்ட ஒரு அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்பவும், நாம் இலங்கையர் என்ற பொது அடையாளத்துக்குள் அனைத்து மக்களினதும் இன, மத, மொழி ரீதியான தனித்துவங்களை அங்கீகரித்து மதித்து நடக்கும் உயர் ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட தேசமாகவும், அனைத்து மக்களுக்குமான பாரபட்சமற்ற பொருளாதார சுபிட்சம் மிக்க நாடாகவும் எமது தேசத்தை கட்டி எழுப்புவதே சமூக நீதிக் கட்சியின் அடிப்படை இலக்குகளாகும்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட அன்றிலிருந்து கட்சியின் அங்கத்துவம், கட்சியின் கிளைகள் அமைத்தல், கட்சியின் உள்ளக கட்டமைப்பினை ஒழுங்கமைத்தல், கட்சியின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல் தத்துவங்களை வடிவமைத்தல், கட்சிக்கான யாப்பினை வரைதல், கட்சிக்கான நிதி சார் நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல் என பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த பின்னர் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் பல உள்ளூராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 30ற்கும் மேற்பட்ட வேட்பாளர்களை சமூக நீதிக் கட்சி சார்பாக முன்னிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கட்சியின் அங்கத்தவர்களாகவும், உள்ளூராட்சி மன்ற வேட்பாளராகவும் கடந்த ஒரு வருட காலத்துக்குள் எம்மோடு இணைந்து கொண்டவர்கள் முற்போக்கான அரசியல் சிந்தனையும், உயர் கல்வித் தகமையும் கொண்ட சமூக, அரசியல் மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய இளம் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முற்போக்கு சிந்தனையும் சமூக அரசியல் மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இயங்கக்கூடிய சமூக அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான அரசியல் தளமே சமூக நீதி கட்சியாகும்.

தற்போது கட்சி ஸ்தபிக்கப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் பலமான அடித்தளத்தின் மீது கட்சி ஒழுங்கமைக்கப்பட்டு, தனது பேராளர் மாநாட்டை மிகவும் விமர்சையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பேராளர் மாநாட்டின் முதலாவது அமர்வு அரசியல் அமர்வாகவும் இரண்டாவது அமர்வு கட்சியின் உள்ளக அமர்வாகவும் இடம் பெறவுள்ளன.

முதலாவது அமர்வில் அரசியல் பிரமுகர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், துறைசார் அறிஞர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இரண்டாவது அமர்வு கட்சியின் அங்கத்தவர்களுக்கான வருடாந்த பொதுக்கூட்ட அமர்வாக அமையும்.

இந்தப் பின்னணியில் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், கட்சியின் அடிப்படை அரசியல் கலாச்சாரம் என்பவற்றை ஏற்றுக்கொள்ளும் எவரும் சமூக நீதிக் கட்சியின் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் சமூக நீதி கட்சியில் இணைந்து செயற்பட விரும்புபவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது .

அவ்வாறு இணைந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டதரணி ருடானி ஸாஹிர் அவர்களை அவரது வட்ஸ்அப் இலக்கத்தில் (075 286 3047) தொடர்பு கொண்டு கட்சியின் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...