சவுதி அரேபியாவின் பேரீத்தம் பழங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு: முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Date:

சவுதி அரசால் இலங்கையின் சவுதி தூதரகம் மூலம் 50 மெட்ரிக் தொன்கள் பேரீத்தம் பழங்கள் எமது திணைக்களத்திற்கு வழங்கப்பட்டன. ஏற்கனவே குறிப்பிட்ட 36 தொன்களிற்கு மேலதிகமாக 13.04.2023 திகதி மேலும் 14 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களை சவுதி தூதரகம் வழங்கியது.

இப் பேரீத்தம் பழங்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து பிரச்சினை மற்றும் நோன்பின் இறுதிக் காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவற்றை கொழும்பு மாவட்டத்தினை அண்மித்த மாவட்டங்களான கம்பஹா, களுத்துறை, காலி, புத்தளம் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விநியோகிப்பது என தீர்மானிக்கப்படட்டு, போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து செலவுகள் தூதரகத்தின் உதவியுடன் தற்போது விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு மேற்கூறிய 50 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களுக்கு மேலதிகமாக 15 இற்கும் அதிகமான மெட்ரிக் தொன்கள் அளவில் சவுதி தூதரகத்தின் மூலம் நேரடியாக இலங்கையிலுள்ள பள்ளிவாசல்கள், அரபு மத்ரஸாக்கள், அமைப்புகள், சிறைச்சாலைகள், பாடசாலைகள் போன்றவைகளிற்கும் வழங்கபட்டுள்ளது.

மேற்படி எமது நாட்டிற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பேரீத்தம் பழங்களை தந்து உதவிய சவுதி அரசாங்கத்திற்கும், தற்போதைய தூதுவர் His Excellency Ambassador Khalid Hamoud Alkahtani, Royal Embassy of Saudi Arabia, Colombo மற்றும் அதன் உத்தியோகத்தர்களிற்கும் இலங்கை அரசு, எமது அமைச்சு, எமது திணைக்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் சார்பான நன்றிகளையும் பிரார்த்தனை களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பணிப்பாளர்
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...