சாணக்கியனுக்கும் பிரதி சபாநாயகருக்கும் சபையில் கடும் வாக்குவாதம்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கும், பிரதி சபாநாயகருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தெற்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபையில் கேள்விக்கான நேரம் வழங்கப்படுவதாகவும், ஆனால் வடக்கு – கிழக்கினை பிரதிநிதித்துவம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் சாணக்கியன் கேள்வி எழுப்ப முற்பட்டுள்ளார். எனினும் இதற்கு பிரதி சபாநாயகர் அதற்கு இடமளிக்காத நிலையில் சாணக்கியன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான பக்கசார்பாக அரசாங்கம் நடந்து கொள்வதாலேயே இன்று வடக்கு கிழக்கில் பூரண நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்படுவதாகவும் சாணக்கியன் சபையில் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

எனினும் இறுதிவரை சாணக்கியன் முழுமையாக கருத்து தெரிவிப்பதற்கு இடமளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாலை 5.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...