சூடானில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் இரண்டாவது குழு சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள கிங் பைசல் கடற்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தக் குழுவில் 06 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இக்குழுவினரை சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சியூலர் அலுவலகம் பொறுப்பேற்றுள்ளது.
சூடானில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அங்கு தங்கியிருந்த 13 இலங்கையர்கள் அண்மையில் ஜித்தாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களை திரும்பப் பெறுவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் ஆதரவளிப்பதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சூடானில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையர்களும் போர்ட் சூடானில் உள்ள அல் ரவுதா ஹோட்டலில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தூதரகம் தெரிவித்துள்ளது.