உள்நாட்டு போர் இடம்பெற்று வரும் சூடானில் இருந்து இலங்கை பிரஜைகளின் முதல் குழு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார்.
இந்த குழுவை சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கு வெளியேற்றியதாகவும், ஜித்தாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் பதில் துணைத் தூதரகத்தால் வரவேற்கப்பட்டதாகவும் அமைச்சர் சப்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சூடானில் இருந்து இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு வசதியளித்த சவூதி அரேபிய இராச்சியத்திற்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 15 அன்று சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே நடந்த சண்டையில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த வெளியேற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சூடானில் இருந்து தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் இலங்கை தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சூடானில் இருந்து இலங்கையர்களை பாதுகாப்பான வெளியேற்றத்தை அடுத்த சில நாட்களில் அடைய முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
The first group of Sri Lankans have been successfully evacuated from #Sudan! They were received on disembarking at #Jeddah by our actg.Consulate General @SLinJeddah. We are grateful to the Kingdom of Saudi Arabia🇸🇦 for supporting 🇱🇰 @KSAMOFA @KSAembassylk @MFA_SriLanka pic.twitter.com/PyadA3LQNf
— M U M Ali Sabry (@alisabrypc) April 26, 2023