சூடானில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மேலும் 40 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அங்கு தவித்து வருவதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.
சூடானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 13 இலங்கையர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் அவர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நிர்க்கத்தியாகியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கில், சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி எம் ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.
சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக இதுவரை 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.