சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படை ஒன்றுக்கு இடையிலான அதிகார மோதலில் 50க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் கார்டூமில் ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்சி மற்றும் இராணுவ தலைமையனத்தில் கடும் மோதல் வெடித்த நிலையில் பொதுமக்கள் அந்த மோதல்களில் சிக்கியுள்ளனர்.
தலைநகரில் இடம்பெற்ற மோதல்களில் 17 பொதுமக்கள் உட்பட இருபத்து ஐந்து போர் கொல்லப்பட்டதாக மருத்துவர்களின் குழு குறிப்பிட்டுள்ளது. ஆட்சியை பொதுமக்களுக்கு கையளிப்பதற்காக முன்மொழிவு ஒன்றை அடுத்தே மோதல் வெடித்துள்ளது.
இராணுவம் மற்றும் அதன் போட்டியாளர்களான அதிரடி உதவிப் படையினர் ஆகிய இரு தரப்பும் விமானநிலையம் மற்றும் கார்டூமில் உள்ள மற்ற முக்கிய தளங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறியபோதும் நேற்றைய (16) தினத்திலும் மோதல் தொடர்ந்து நீடித்தது.
துணை இராணுவப் படை தளங்கள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இராணுவம் குறிப்பிட்டிருப்பதோடு, நாட்டு மக்களை வீடுகளில் இருக்கும்படி விமானப்படை குறிப்பிட்டுள்ளது. மக்களிடையே அச்சம் மற்றும் பயம் நிலவி வருவதாக கார்டூம் நகர குடியிருப்பாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதில் தலைவராக உள்ள ஜெனரல் அப்தல் பத்தா அல் புர்ஹானுக்கு இராணுவம் ஆதரவு அளிக்கும் நிலையில் பிரதித் தலைவரான முஹமது ஹம்தான் டகலோவுக்கு துணை இராணுவப் படை ஆதரவு அளிக்கும் நிலையிலேயே இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
அனைத்து இராணுவத் தளங்களும் கைப்பற்றப்படும் வரை தமது துருப்புகள் சண்டையிடும் என்று ஹம்தான் தெரிவித்துள்ளார். மறுபுறம் துணை இராணுவப்படை கலைக்கப்படும் வரையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மத்திய கிழக்கில், ‘சகோதர சூடானிய மக்களின் வாழ்க்கை மற்றும் திறன்களைப் பாதுகாப்பதற்கும், தாயகத்தின் உச்ச நலன்களை நிலைநிறுத்துவதற்கும்’ அனைத்து சூடானியக் கட்சிகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு எகிப்து அழைப்பு விடுத்தது.
அத்தோடு,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனைத்து தரப்பினரையும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், தீவிரமடையவும், உரையாடல் மூலம் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கார்ட்டூமில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் ‘சூடானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மிகுந்த அக்கறையுடன் பின்பற்றி வருவதாகவும், மேலும் தீவிரமடைவதன் முக்கியத்துவம் குறித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையேயான நெருக்கடிக்கு அமைதியான தீர்வைக் கண்டறியும் நோக்கில் செயல்படுவதாகவும்’ அந்த நிறுவனம் கூறியது.
சவூதி அரேபியாவும் சூடானில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது மற்றும் வெளியுறவு அமைச்சக அறிக்கையில் மோதலில் உரையாடலைத் தேர்ந்தெடுக்க சம்பந்தப்பட்டவர்களை அழைத்துள்ளது