நான் ஒரு சிறந்த பௌத்தன்; ஆனாலும் வருடம் தோறும் நோன்பு பிடிப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது: சனத்

Date:

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நோன்பு நோற்பதாகவும், பாரம்பரியமாக தான் நோன்பு பிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, சனத் ஜெயசூரிய ஒவ்வொரு ஆண்டும் தனது இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து ரமழானுக்காக சில நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறினார்.

எவ்வாறாயினும் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஆரம்பத்தில் 12 வருடங்களாக முஸ்லிம் வீடொன்றிலேயே தங்கி இருந்ததாகவும், அப்போது அங்கிருந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுடன் எனக்கு இருந்த நெருக்கம் காரணமாக இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்தும் நோன்பு நோற்பேன், அவர்கள் தான் என்னை கவனித்தார்கள், அவர்கள் பணத்துக்காக என்னை தங்க வைக்கவில்லை, குடும்ப உறவினராகவே நடத்தினார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும், நான் பௌத்தன், ஆனாலும் மதம் மாறப்போவதில்லை, என்னை 12 வருடமாக பாசமாக பார்த்துக்கொண்டார்கள் அதற்காகத்தான் நோன்பு பிடிக்கும் வழக்கம் எனக்கு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் அது தவறான விடயமல்ல, நோன்பு பிடிப்பது நல்ல விடயம் எனவும் அதை சொல்வதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை எனவும் அவர் இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...