தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் இன்று முதல் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நேற்று (04) நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டோம் மற்றும் நீர் வழங்கல் சபை நிர்வாகத்திடமிருந்தோ அல்லது அமைச்சரிடமிருந்தோ சாதகமான பதிலைக் கோரினோம். அவர்களிடமிருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என தொழிற்சங்க அழைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்
மார்ச் 13 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் ஆனால் உரிய அதிகாரிகளிடமிருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என தொழிற்சங்க அழைப்பாளர் தெரிவித்தார்.
அதன்படி, மறு அறிவித்தல் வரை அனைத்து அலுவலகக் கடமைகளிலிருந்தும் வாடிக்கையாளர் சேவைகளில் ஈடுபடுவதிலிருந்தும் விலகியிருக்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது
அமைச்சு அல்லது தலைவரிடமிருந்தோ எமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
நீர் நீர் வழங்கல் சபை பொது மேலாளர் மற்றும் அதிகாரிகளுடன் பல சுருக்கமான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன, ஆனால் அவை வெற்றிபெறவில்லை.
பழுதடையும் போது பழுது நீக்குவதில் தாமதம் ஏற்படும். இன்று முதல் குடிநீர் விநியோகம் தடைபட வாய்ப்பு உள்ளது, என்றார்.