பட்டினி கிடந்தால் இயேசுவை பார்க்கலாம்: கென்யாவில் மூட நம்பிக்கைக்கு 47 பேர் பலி!

Date:

பட்டினியால் இறந்தால் பரலோகம் செல்லலாம் என்ற நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணி தொடர்கிறது.

இந்த சடலங்கள் அனைத்தும், ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என்று நம்பப்படுகிறது.

கென்யாவின் மாலிண்டியில் இதுவரை 47 பேரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில், கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள பொலிஸார் வெள்ளிக்கிழமை ஷகாஹோலா காட்டில் இருந்து உடல்களை தோண்டி எடுக்கத் தொடங்கினர்.

மூன்று நாட்களுக்கு முன் வரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மட்டும் 26 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது மக்களை உறைய வைத்துள்ளது.

“இன்று நாங்கள் மேலும் 26 உடல்களை தோண்டி எடுத்துள்ளோம், இது அந்த இடத்திலிருந்து மொத்த உடல்களின் எண்ணிக்கையை 47 ஆகக் அதிகரித்துள்ளது” என்று கிழக்கு கென்யாவின் மாலிண்டியில் உள்ள குற்றவியல் விசாரணைத் தலைவர் சார்லஸ் கமாவ் கூறினார்.

சடலங்களை தேடும் பணி தொடர்கிறது, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில், குழுவைச் சேர்ந்த 15 பேர் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.

பட்டினியால் இறப்பதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம் என்ற கொள்கைளை
பிரசாரம் செய்து Good News International Church என்ற பெயரில் அமைப்பு நடத்தி வந்த மகென்சி என்தெங்கே என்ற போதகரை கைது செய்து நடத்திய விச ரணை களின் பின்னரே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்களில் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...