இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பல உணவுப் பொருட்களுக்கான தடையை நீக்குமாறு வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களுக்கு அதிகம் தேவைப்படும் சிவப்பு சீனி, பச்சைப்பயறு, உழுந்து மஞ்சள், குரக்கன் போன்ற உணவுப் பொருட்களுக்கான தடையை நீக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விவசாயிகளை பலப்படுத்தும் வகையில், கடந்த பருவத்தில் இந்த உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு அந்த உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி வரி விதிக்க வேண்டும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் அது தொடர்பான உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் கறுப்பு மாஃபியாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.