புத்தாண்டின் போது நகரங்களுக்கு வரும் மக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

Date:

புத்தாண்டுக்காக ஷாப்பிங் செய்ய நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா, இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

விசேட சுற்றிவளைப்புகளுக்காகவும் விசேட போக்குவரத்து கடமைகளுக்காகவும் நகரங்களைச் சுற்றி அதிகளவான அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நகரங்களுக்கு வரும் மக்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருக்கக் கூடும் எனவே அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...