பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக கண்காட்சி!

Date:

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக கண்காட்சி தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள RAK கண்காட்சி மையத்தில் 2023 ஒக்டோபர் 20 முதல் 29 வரை வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

“தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் இந்த வர்த்தக கண்காட்சியானது அரபு இராச்சியத்திற்கான இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் இலங்கை சுற்றுலாத்துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பொருளாதார சூழல்களில் இலங்கை வர்த்தக நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும், பல்தரப்பு நிறுவனங்களுக்கு இடையிலான வணிக உறவுகளை வலுப்படுத்தவும் இந்த கண்காட்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவது இதன் மற்றொரு நோக்கமாகும்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...