வெல்லவாய – தனமல்வில வீதியில் யாலபோவ பகுதியில் நேற்றிரவு கெப் வண்டியொன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு குழந்தை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் முச்சக்கர வண்டியின் சாரதி (44), அவரது மனைவி (42) மற்றும் தந்தை (70) என அவர்கள் தெரிவித்தனர். அவர்களது குழந்தை வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து, போதையில் அப்பகுதியை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கெப் சாரதியை, பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.