முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்படுமா?

Date:

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதியின் செயலாளர், விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கோழி மற்றும் முட்டைத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க நடவடிக்கை எடுத்தால் 15 நாட்களுக்குள் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டை போக்க முடியும் என தொழில்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...

இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள்...