யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

Date:

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு இந்த வருடமும் இடம்பெற்றது.

அதற்கமைய நேற்றையதினம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

.நிகழ்வு மௌலவி. அல்ஹாபிழ். எம்.ஏ.எம். அஸ்லம் (அய்னி) அவர்களின் குர்ஆன் ஓதலுடன் நிகழ்வு ஆரம்பமானதுடன் சர்வமத நிகழ்வில் நான்கு மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மதத்தலைவர்களும், மதம் போதகர்களும் கலந்து கொண்டு தங்களது ஆசியுரைகளையும், கருத்துக்களையும் முன்வைத்தார்கள்.

மேலும், கலாபூசணம் பரீட் இக்பால் அவர்கள் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் அவர்களுக்கு குர்ஆன் தமிழ் பெயர்ப்பு பிரதி ஒன்று சபையோர் முன்னிலையில் வழங்கிவைத்தார்.

அத்தோடு ரமழான் ஓர் பண்பாட்டுப் பாசறை எனும் தலைப்பில் மௌலவி எம்.ஏ.சி.எம். அஜ்மல் (இஸ்லாஹி) அவர்கள் உரைநிகழ்த்தினார்.

தொடர்ந்து, ரமழானும் சகவாழ்வும், என்ற தொனிப்பொருளில் மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) அவர்கள் உரை நிகழ்த்தினர்.

மதவிழுமியங்களை கடைப்பிடிப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எஸ்.எம். நிஸ்தாக் (காஸிமி)அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பிரதம விருந்தினர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் (அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) அவர்களது விசேட உரையும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம்கள் சார்பில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினால் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்நினைவுச் சின்னத்தை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்களும், மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் தலைவர் மௌலவி பைசர் (மதனி) அவர்களும் வழங்கி வைத்தார்கள்.

இதேவேளை அதான் நிகழ்வு மௌலவி பி.எம். அஹ்சன் (அஷ்ரபி) அவர்களால் நிகழத்தப்பட்டது. இவ்விசேட இப்தார் நிகழ்வில் யாழ்ப்பாணம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், யாழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள், இளைஞர்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...