யாழ் நெடுந்தீவு பகுதியில் ஐந்து பேர் படுகொலை !

Date:

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நெடுந்தீவு இறங்கு துறை மற்றம் கடற்படை முகாம் என்பவற்றிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கொலை இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. இனந்தெரியாத சிலர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட 5 பேரில் இருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...